பாஸ் கட்சித் தலைவர் திட்டவட்டம்
இந்த நாட்டை ஆட்சி செய்வதற்குப் பக்காத்தான் ஹராப்பான் பொருத்தமற்றது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வாதிட்டுள்ளார். பக்காத்தான் ஹராப்பானில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருப்பதால் மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையினராக கொண்ட ஒரு நாட்டில் அந்தக் கூட்டணி, ஓர் அரசாங்கமாக செயல்படுவது பொருத்தமற்றது என்று அந்த மதவாதக் கட்சித் தலைவர் கூறுகிறார்.
இன்று பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கம் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. காரணம், மலாய்க்கார்கள் மற்றும் முஸ்லீம்களை பெரும்பான்மையினராக கொண்ட மலாய்க்கார கட்சிகள், அரசாங்கத்திற்கு தலைமையேற்கவில்லை என்று ஹாடி அவாங் குறிப்பிட்டார்.








