May 22, 2026
Thisaigal NewsYouTube
தகவல் அளித்தவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

தகவல் அளித்தவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில் சம்பந்தப்பட்டவரை கைது செய்து, குற்றவாளி என்று உறுதி செய்யப்படும் வரையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்-மிற்கு துல்லியமாக தகவல் தந்து உதவிய 514 அரசாங்க ஊழியர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட்டு விட்டதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 க்கும் 2023 க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் மொத்தம் 10 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான தொகையில் வெகுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிகின்றவர்களுக்கு எதிராக தகவல் அளிப்பவர்களுக்கும் இதே போன்ற வெகுமதி அளிக்கப்படும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News