கூலிம், ஜனவரி,15-
கூலிம் கெலாங் பாருவில் அமைந்துள்ள தாமான் செப்பிலாய் தேவி ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்தின் வெ 20,000.00 வசூல் நிதி மோசடி தொடர்பில் 46 வயதுடைய அந்த முன்னாள் தலைவரைக் கூலிம் மாவட்டத்தின் வணிக குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் கைது செய்திருப்பதாக கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டென்டன் சுல்கிஃப்லி பின் ஹஜிஜான் தெரிவித்தார்.

அவர் தமது வீட்டின் முன்புறத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை அவரை விசாரணை செய்ததில் ஆலயத்தின் வசூல் நிதியான வெ 20,000.00 ரிங்கிடை மோசடி செய்ததோடு தவறான வகையிலும் அந்நிதியை உபயோகப்படுத்தியதை அவ்வாடவர் ஒப்புக் கொண்டார்.

குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவ்வாடவர் இன்று கூலிம் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டம் செக்ஷன் 408 கீழ் குற்றம்சாட்டப்படவிருப்பதாக சுல்கிஃப்லி பின் ஹஜிஜான் குறிப்பிட்டார்.








