Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளிகளுக்கு பொதுப் போக்குவரத்து இலவசம்
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு பொதுப் போக்குவரத்து இலவசம்

Share:

ப்ராசரானா மலேசியா பெர்ஹாட்டின் ஈன் கீழ் செயல்படும் LRT, Monorel, MRT, பஸ் சேவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் February 1 ஆம் தேதி தொடங்கி அத்திட்டம் அமலாக்கத்திற்கு வருகிறது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அச்சிறப்பு சேவையை அனுபவிக்க அவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறிய அவர், இந்த ஒரு மாத காலத்தில், தேவைப்பட்ட சில மாற்றங்களை செய்த பின்னர் அமலுக்குக் கொண்டு வர அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்னர் 50 சதவிகிதம் கழிவை மட்டும் வழங்கப்பட்டிருந்தது. , இப்போது வழங்கப்பட்டுள்ள இலவச சேவையை அனுபவிக்க சில விதிமுறைகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், Rapid KL மற்றும் Rapid Penangஉம் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக Rapid Mobility எனப்படும் சிறப்பு வேன் சேவையை வழங்குகிறது என்றார் அவர்.

Related News