திடலில் எதிர்பாராத விதமாக இரும்பு கோல் கம்பம் உடைந்து மாணவன் மீது விழுந்த போது கடும் காயங்களுக்கு ஆளான 11 வயதுடைய அந்த மாணவன் உயிரிழந்தான். இச்சம்பவம் நேற்று காலை 7.24 மணியளவில் சரவா, பிந்தூலு, எஸ்.தி. அந்தோணி தேசியப் பள்ளியில் நிகழ்ந்தது. இச்சம்பவத்தை பிந்தூலு மாவட்ட போலீஸ் தலைவர் பார்தலோமிவ் உம்பிட் தெரிவித்தார்.
பள்ளி புறப்பாட நடவடிக்கையில் மாணவர்கள் பங்கேற்ற போது,நிகழ்ந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாணவன் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளானகினார்.பின்னர் அந்த மாணவன் உடனடியாக பிந்தூலு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்த விட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று பார்தலோமிவ்கு உம்பிட் றிப்பிட்டார்.








