Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
தற்போதைய செய்திகள்

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

தீபத் திருநாள் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்தியர்களுக்கும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தமது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தீபாவளி என்பது இருளை நீக்கும் ஒளியின் வெற்றியைக் குறிக்கும் விழாவாகும். தீபாவளியில் ஒளிரும் தீபக் கதிர்களைப் போலவே, நமது சொந்தங்களும், உறவுகளும், சுற்றத்தாரும் அன்பில் திளைத்து இன்பத்தில் இந்த விழாவைக் கொண்டாட நான் மனதார வாழ்த்துகிறேன்.

இன்றைய காலக் கட்டத்தில் மலேசியர்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் என முக்கிய துறைகளில் இலக்கவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்ற ஒளி பரவியுள்ளதை நாம் பெருமையுடன் காண்கிறோம். இந்த இலக்கவியல் நீரோட்டத்தில் நமது இந்தியச் சமுதாயம், பின் தங்கிவிடாமல் இருப்பதை மடானி அசராங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் எனது முழு ஆதரவும் பங்களிப்பும் மனப்பூர்வமாக இருக்கும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

மடானி அரசாங்கத்தின் கீழ் இந்தியர்களின் நலன் காக்கப்படும். நாட்டின் தூர நோக்குத் திட்டத்தில் இந்தியர்களையும் மடானி அரசாங்கம் அரவணைத்துச் செல்லும். மித்ரா மற்றும் கோவில்கள் மட்டுமின்றி, பிற மேம்பாட்டுத் திட்டங்களையும் இந்தியர்களுக்காக இந்த ஒற்றுமை அரசாங்கம் வழங்கி வருகிறது என்பதையும் கோபிந்த் சிங் சுட்டிக் காட்டினார்.

மேலும் தமிழ் பாலர் பள்ளி, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு, இந்திய வணிகர்களுக்கான பிரத்தியேக உருமாற்றுத் திட்டங்கள், இளைஞர்களுக்காக சிறப்புத் திறன் பயிற்சித் திட்டங்கள் என சமூக நல மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை மலேசிய இந்திய சமுகம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோபிந்த் சிங், தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டார்.

Related News