ஜோகூர் பாரு, செப்டம்பர்.05-
ஜோகூர் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கி இஸ்கண்டார் புத்ரி மற்றும் கூலாய் ஆகிய பகுதிகளில் மாநில குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 96 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சோதனை, மலேசிய எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சியின் ஒத்துழைப்புடன் குடிநுழைவுத்துறையின் அமலாக்கப் பிரிவு மேற்கொண்டதாக மாநில இயக்குநர் முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.
வேலை பெர்மிட் இன்றி சட்டவிரோதக் குடியேறிகள் அதிகமாக வேலை செய்து வருவதாகக் கிடைக்கப் பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையில் 199 அந்நிய நாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.








