Sep 26, 2026
Thisaigal NewsYouTube
தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்
தற்போதைய செய்திகள்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

Share:

கோலாலம்பூர், மே.24-

ஹாரி ராயா ஹாஜியையும், பள்ளி விடுமுறையையும் முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, தரை பொதுச் போக்குவரத்து முகமையின் அனுமதியுடன் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக Terminal Management and Services - TMAS பேருந்து முனையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பயணிகளின் வருகைக் காரணமாக பேருந்து டிக்கெட் விற்பனை 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், வடக்கு, கிழக்கு கடற்கரை சாலையிலும் தெற்கு நோக்கிய நெடுஞ்சாலையிலும் தேவை அதிகமாக உள்ளது.

விடுமுறை காலத்தில் பயணிகளின் நெரிசலைத் தவிர்ப்பதற்காக, பேருந்து முனைய நிர்வாகம் தனது செயல்பாட்டு முறைகளை மேம்படுத்தியதுடன், கூடுதல் பணியாளர்களையும் நியமித்துள்ளது. தாமதங்களைத் தவிர்க்க, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு முன்கூட்டியே நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News