கோத்தா பாரு, செப்டம்பர்.09-
கிளந்தானில் கடந்த 8 மாதங்களில் 35 பேர் துபேர்குலோசிஸ் என்ற டிபி நோய்க்குப் பலியாகியிருப்பதாக அம்மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஸைனி ஹுசேன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை வரையில், அம்மாநிலத்தில் 636 பேருக்கு டிபி கண்டறியப்பட்டதாகவும், அதில் கோத்தா பாரு மாவட்டம் முன்னிலை வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற 7 மாவட்டங்களோடு ஒப்பிடுகையில், கோத்தா பாருவில் மட்டும் கடந்த ஜூலை மாதத்தில், 14 பேருக்கு டிபி கண்டறியப்பட்டிருப்பதாக நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் டாக்டர் ஸைனி ஹுசேன் தெரிவித்துள்ளார்.








