பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.12-
அம்னோ கட்சியின் எதிர்காலத்தை உருவாக்கும் முக்கிய நகர்வாக, Sekolah Patriotik UMNO எனப்படும் 'அம்னோ தேசப்பற்றுப் பள்ளி' திகழ்கிறது என அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.
இளைஞர்களைப் புதிய தலைவர்களாக வளர்த்தெடுப்பதன் மூலம், கட்சியின் கொள்கைகளையும் மக்கள் மீதான பொறுப்பையும் அவர்கள் நன்கு புரிந்து கொள்ள இந்த முயற்சி உதவும் என்றார்.
மேலும், இந்தப் பள்ளி இளைஞர்களுக்கு அம்னோவின் அடித்தளப் போராட்டத்தைப் பற்றி வெளிப்படுத்துவதுடன், கட்சியின் பலம், பலவீனங்களை வெளிப்படையாக மதிப்பிடும் தளமாகவும் உள்ளது. கடந்த காலத் தவறுகள் உட்பட தலைவர்களின் அனுபவங்களைப் பகிர்வதன் மூலம், வருங்காலத் தலைவர்கள் படிப்பினைகளைப் பெற்று, கட்சி எழுச்சி பெறச் சீர்திருத்தங்கள் செய்ய முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
அம்னோவின் தலைவரான டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியின் எண்ணத்தில் உருவான இந்தப் பள்ளி, கட்சியின் சீர்திருத்தையும் புதிய அரசியல் கட்டமைப்பையும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என ஜொஹாரி மேலும் கூறினார்.








