கோத்தா பாரு, ஆகஸ்ட்.03-
5 வயதிலேயே பாலர் பள்ளிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கொள்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடெக் அதிரடியாக அறிவித்துள்ளார். 13வது மலேசியத் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும் என்றும், கொள்கை நிலையிலான முடிவு எடுக்கப்பட்டு விட்ட நிலையில், தொழில்நுட்ப அம்சங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கொள்கை அமல்படுத்தப்படும் போது முதலாம் ஆண்டு கல்வியும் எஸ்பிஎம் தேர்வு வயதும் மாற்றப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும், புறநகர்ப் பகுதிகளில் கூடுதல் பாலர் பள்ளி வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.








