Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கடலோர நகரங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடலோர நகரங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

கிள்ளான், நவ.14-


வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து கடலோர நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோரப்பகுதிகளான கிள்ளான், கோலக்கிள்ளான், கோலக்கெடா, தெலுக் இந்தான் மற்றும் பெக்கான் குக்குப் முதலிய பகுதிகளில் இத்தகைய அபாயம் இருப்பதாக கோடிகாட்டப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியவில் நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி இந்த 4 இடங்களில் கடல் பெருக்கால் திடீர் வெள்ளம் ஏற்பட சாத்தியம் உள்ளதாக நில அளவு, வரைபட இலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் 17 ஆம் தேதி வரையில் கடல் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். இக்காலகட்டத்தில் பேரா மாநிலத்தில் தெலுக் இந்தான், சிலாங்கூரில் கிள்ளான், கிள்ளான் துறைமுகம், கெடா மாநிலத்தில் கோலக்கெடா மற்றும் ஜோகூரில் பெக்கான் குக்குப் பாதிக்கப்படலாம்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்கும்படி அவ்விலாகா கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →