அனுமதியின்றி மின் வர்த்தக முறை வாயிலாக பகாங் மாநிலத்தின் உயரிய விருதுகளுக்கான பதக்கங்கள் மற்றும் சின்னங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவது தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ யாயா ஓத்மான் தெரிவித்துள்ளார். இந்த மின் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் மற்றும் பதக்கங்களை விற்பவர், வாங்குபவர் குறித்து தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக யாயா ஓத்மான் குறிப்பிட்டார்.
பகாங் மாநில உயரிய விருதுக்கான பதக்கங்கள் மற்றும் சின்னங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கடந்த ஜுலை 11 ஆம் தேதி பெக்கான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் உயரிய விருதுக்கான பதக்கங்கள் விற்பனை செய்யப்படுவது 2017 ஆம் ஆண்டு பகாங் விருதளிப்பு சட்டத்திற்கு முரணானதாகும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


