May 5, 2026
Thisaigal NewsYouTube
பத்து காஜாவில் கோர விபத்து: இரு பெண்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

பத்து காஜாவில் கோர விபத்து: இரு பெண்கள் உயிரிழந்தனர்

Share:

ஈப்போ, பிப்ரவரி.10-

பத்து காஜா, கம்போங் பத்து 1 அருகே ஜாலான் தஞ்சோங் துவாலாங் சாலையில், இரு வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானதில், கார் ஒன்றில் பயணம் செய்த இரு பெண்கள் உயிரிழந்தனர்.

நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, 65 வயதுடைய ஜி. சரஸ்வதி மற்றும் 34 வயதுடைய எஸ்.ஆர். சரளா தேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இருவரும் காரின் முன்புறம் உள்ள இருக்கையில் சிக்கிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related News