கிள்ளான், செப்டம்பர்.03-
கோலக்கிள்ளான், மேற்கு துறைமுகத்திற்குச் செல்லும் ஜாலான் பெலாபுஹான் பாராட்டில் தனது கணவர் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாது ஒருவர் டிரெய்லர் லோரியினால் மோதிப்பட்டு உயிரிழந்தார்.
நெஞ்சை உருக்கும் இச்சம்பவம் இன்று மதியம் 1.20 மணியளவில் பூலாவ் இண்டாவிலிருந்து கிள்ளான் நோக்கிச் செல்லும் சாலையில் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து தெற்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்லி காசா கூறுகையில், "எஸ்எம் ஸ்போர்ட் ரக மோட்டார் சைக்கிளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் பயணித்துக் கொண்டிருந்த பொழுது, டிரேலர் லாரியினால் மோதப்பட்டுள்ளனர் என்றார். இதில் சாலையில் விழுந்த மாது லோரியின் சக்கரத்தில் சிக்கி அரைப்பட்டு மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.








