Oct 13, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம் பாதிப்பு: மூன்று மாநிலங்களிலும் 9 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் மூடல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம் பாதிப்பு: மூன்று மாநிலங்களிலும் 9 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் மூடல்

நாட்டில் புகைமூட்டம் காரணமாகக் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் நாளை அக்டோபர் 14 ஆம் தேதி புதன்கிழமை அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், சிலாங்கூரில் உலு லங்காட், சிப்பாங், பகாங்கில் குவாந்தான், பெக்கான், ரொம்பின்; சபாவில் தாவாவ், சரவாக்கில் செரியான், ஸ்ரீ அமான், லுபோக் அந்து ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் பள்ளிகள் மூடப்படும். பாதிக்கப்படாத மற்ற பகுதிகளில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.

பள்ளிகள் மூடப்படும் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

காற்றுத் தரக் குறியீடு 180ஐத் தாண்டினாலோ அல்லது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 150க்கு மேல் பதிவானாலோ பள்ளிகளை மூட வேண்டும் என்ற நடைமுறையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்