ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.23-
ஜோகூர் பாரு, தாமான் ஜோகூர், ஜாலான் பெலுமிட், டேசா ரஹ்மாட் இடைநிலைப்பள்ளி அருகில் நிகழ்ந்த தீ விபத்தில் நான்கு கடைகள் அழிந்தன.
இச்சம்பவம் இன்று காலை 6.40 மணியளவில் நிகழ்ந்தது. மூன்று இயந்திரங்களுடன் 23 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதுடன் அருகில் உள்ள கடைகளுக்குத் தீ பரவாமல் தடுத்தனர் என்று லார்கின் தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க கமாண்டர் நோர்டாதுல் பட்ருல்றுல்துல் ரஹ்மான் தெரிவித்தார்.








