மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி, பாத்தாங் பெனார் நிலையம் மற்றும் லாபு நிலையம் இடையிலான மின்சார மேல்நிலை கம்பி அமைப்பைச் சீரமைக்கும் பணிகள் இன்று பிற்பகல் 1.41 மணிக்கு முழுமையாக நிறைவடைந்ததாகத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கேடிஎம் கொமுட்டர் லெம்பா கிளாங் மற்றும் புலாவ் செபாங்-பத்து கேவ்ஸ்-புலாவ் செபாங் வழித்தடத்தில் இயங்கும் இடிஎஸ் மின்சார ரயில் சேவைகள் வழக்கம்போல் மீண்டும் தொடங்கியுள்ளன.
எனினும், ரயில் அட்டவணை மற்றும் ரயில்களின் இயக்கத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் காரணமாக, சில இடிஎஸ் சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்படலாம் என்று கேடிஎம்பி தெரிவித்துள்ளது.
இன்றைய சேவைத் தடங்கலின்போது பயணிகள் வழங்கிய பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்கு கேடிஎம்பி நன்றி தெரிவித்ததுடன், ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.








