கோல கிள்ளான், ஆகஸ்ட்.01-
கோல கிள்ளான், ஶ்ரீ பெரந்தாவ் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் எட்டாவது மாடியிலிருந்து சிறுவன் கீழே விழுந்து மரணமுற்ற சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் கமால் அரிஃபின் தெரிவித்துள்ளார்.
பிளாக் ஜேவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் போது அந்த நான்கு வயது சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாதது தெரிய வந்துள்ளது.
சிறுவனின் தந்தை வேலை இடத்தில் இருந்த வேளையில் அவனது தாயார், தனது இரண்டாவது பிள்ளையைக் குழந்தை பராமரிப்பாளரிடம் விடுவதற்குச் சென்றுள்ளார்.
அந்த சிறுவன் வீட்டின் எட்டாவது மாடியில் கதவின் வாயிலாக கீழே விழுந்து மரணமுற்றுள்ளான். சிறார்களைக் கவனிக்கத் தவறிய 2001 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








