ஜாசின், ஜூலை.28-
மலாக்கா, ஜாசின், ஜாலான் பெஸ்தாரியில் உள்ள ஒரு பசார் ராயா முன்புறம் கார் நிறுத்தும் இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஆபாசச் சேட்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைக் கும்பல் ஒன்று அடித்துக் கொன்றது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் நிகழ்ந்தது. 51 வயது நபரின் ஆபாசச் செயலைக் கண்ட அந்த பசார் ராயாவில் பொருட்களை வாங்கச் சென்றவர்களில் கும்பல் ஒன்று அந்த ஆடவரை கண்மூடித்தனமாகத் தாக்கியதாக நம்பப்படுகிறது.
பலத்த தாக்குதலுக்கு ஆளான அந்த நபர், அங்கிருந்து தப்பித்து ஒரு வர்த்தகத் கட்டடத்தை நோக்கி ஓடியுள்ளார். எனினும் ஒரு கும்பல், அவரை விரட்டிச் சென்று அருகில் ஆற்றோரத்தில் உள்ள ஒரு புதரில் கடுமையாகத் தாக்கியது.
இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.








