கடந்த வாரம் பத்துகேவ்ஸ், பன்ட்சாபூரி லக்சமனா ஜெயா அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் வீட்டிற்கு செல்வதற்கு லிப்டில் ஏறுவதற்கு முற்பட்ட கணவன், மனைவி மீது எரித் திரவக வீச்சு தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் 60 வயது மூதாட்டி, இன்று செலாாயங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். முக்காடு அணிந்திருந்த அந்த மூதாட்டி, போலீசாரார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, இடைவிடாமல் அழுது கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.
அந்த முதாட்டி குற்றவியல் சட்டம் 324 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் நோர் அரிஃப்ஃபின் முஹமாட் நாசிர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மூதாட்டியினால் எரித்திரவக வீச்சுக்குக்கு ஆளான 60 வயது மாதுவும் அவரின் பாகிஸ்தானிய கணவரும் முகத்தில் கடும் தீக்காயங்களுடன் தற்போது செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் அந்த தம்பதியரின் 14 வயது மகன்,எரித் திரவக வீச்சிலிருந்து தப்பியுள்ளான்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


