கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
தாம் எதிர்நோக்கியுள்ள தேச நிந்தனைக் குற்றச்சாட்டு தொடர்பில் தேச நிந்தனைச் சட்டம் குறித்து 8 கேள்விகளைக் கூட்டரசு நீதிமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் செய்து கொண்ட விண்ணப்பத்திற்குக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
தாம் எதிர்நோக்கியுள்ள குற்றச்சாட்டிற்கும், தேச நிந்தனைச் சட்டத்திற்கும் தொடர்புடைய எட்டு கேள்விகளை முன் வைப்பதற்கு விண்ணப்பதாரர் என்ற முறையில் முகைதீனுக்கு முழு உரிமையுண்டு என்று நீதிபதி டத்தோ முகமட் ஜாமில் தெரிவித்துள்ளார்.








