Sep 11, 2026
Thisaigal NewsYouTube
“புடி மடானி மானியம் தேர்தலுக்கு முன் உயர்த்தப்படுமா?” – அரசாங்கத்தைச் சாடிய ஸாஹிட் ஹாமிடி
தற்போதைய செய்திகள்

“புடி மடானி மானியம் தேர்தலுக்கு முன் உயர்த்தப்படுமா?” – அரசாங்கத்தைச் சாடிய ஸாஹிட் ஹாமிடி

Share:

புடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான குழப்பத்துக்கு இடையே, அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கும்போது ஒதுக்கீட்டு வரம்பு உயர்த்தப்படுமா? என அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி கேள்வி எழுப்பியுள்ளார்.

அச்சம் ஏற்படும் போது ஒதுக்கீடு உயர்த்தப்படுகிறது என்றும், பொதுத் தேர்தல் நெருங்கும் போது மீண்டும் அதிகரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை 2026 -ஆம் ஆண்டிற்கான அம்னோ பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸாஹிட், ஆசிரியரே.. எங்களின் குரலைக் கேளுங்கள், மக்கள் குரலைக் கேளுங்கள் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மறைமுகமாகக் குறிப்பிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீட்டில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் மக்களிடையே தேவையற்ற நிதி கவலையை ஏற்படுத்துவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், பாரிசான் நேஷனல் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அம்னோ நாட்டிற்கு இன்னும் சிறந்த வளர்ச்சிகளை ஏற்படுத்த முடியும் என்றும் அஹ்மாட் ஸாஹிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News