மலேசிய கடற்பரப்பில் கதிர்வீச்சு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், நிகழ்நேர கதிர்வீச்சு முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

லங்காவியிலுள்ள உள்ள காம்மா ஸ்பெக்ரும் (Gamma Spectrum) நீர் கண்காணிப்பு நிலையத்தை நேற்று பார்வையிட்ட அமைச்சர் டத்தோ சாங் லீ காங், நாட்டின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கதிர்வீச்சு கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

GSWMS நிலையங்கள் மூலம் கடலில் உள்ள காமா கதிர்வீச்சின் அளவை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதுடன், கதிரியக்க ஐசோடோப்புகளையும் தொடர்ந்து அடையாளம் காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கதிர்வீச்சு அளவில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், கதிரியக்க மாசுபாடு மற்றும் எல்லைத் தாண்டிய கதிர்வீச்சு அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் லங்காவி, பஹாங், திரங்கானு மற்றும் பிந்துலு, சரவாக் ஆகிய நான்கு இடங்களில் புதிய GSWMS நிலையங்களை அமைக்க மொத்தம் 2.646 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக சாங் லீ காங் தெரிவித்துள்ளார்.








