மலேசியா ஒப்பந்தம் 1963-இன் அடிப்படையில், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சபா, சரவாக் மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க இந்த நடவடிக்கையானது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான முடிவு தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குட்பட்டது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
கோத்தா கினபாலுவில் இன்று நடைபெற்ற MA63 அமலாக்க நடவடிக்கைக் குழு கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார் இதனைத் தெரிவித்துள்ளார்.








