Jun 15, 2026
Thisaigal NewsYouTube
செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட வேலைவாய்ப்புச் சூழல் – அமைச்சர் ரமணன் உறுதி
தற்போதைய செய்திகள்

செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட வேலைவாய்ப்புச் சூழல் – அமைச்சர் ரமணன் உறுதி

Share:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலைச் சூழலை மாற்றினாலும், மனித கண்ணியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வேலைவாய்ப்புச் சூழலை உருவாக்குவதில் மலேசியா உறுதியாக உள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற 114-வது அனைத்துலக தொழிலாளர் மாநாட்டில் பேசிய டத்தோஸ்ரீ ரமணன், மலேசியாவின் 'மடானி' கொள்கையின்படி எதிர்கால வளர்ச்சி மனிதர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார்.

இதற்காக, மலேசியாவின் 17 மில்லியன் பணியாளர்களுக்கு 'சியாஸ்ட்' மற்றும் 'மைமாஹிர்' மூலம் ஏஐ பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, நிறுவனங்களுக்கு 50 விழுக்காடு கூடுதல் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. மேலும், தொழில் நீதிமன்றங்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. ‘மைபியூச்சர்ஜாப்ஸ்’ தளம் வழியாக 1.49 மில்லியன் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன என்று டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக, இவ்வாண்டு ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி, 10 மில்லியன் தொழிலாளர்கள் பெர்கெசோவின் 24 மணிநேர விபத்துக் காப்புறுதி திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.

இது 1969-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக பணியிடத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட ... | Thisaigal News