Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நபர் தவறுதலாக சுடப்பட்டதில் காயம்
தற்போதைய செய்திகள்

நபர் தவறுதலாக சுடப்பட்டதில் காயம்

Share:

பழந்தோட்டத்தில் மரத்தில் ஏறி ரம்புத்தான் பழங்களை பறித்துக்கொண்டு இருப்பவர் தனது நண்பர் என்பதை உணராத முதியவர் ஒருவர், குர​ங்கு என்று நினைத்து துப்பாக்கியால் சுட்டத்தில் 54 வயது நபர் காயத்திற்கு ஆளானார்.

இச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் திரெங்கானு, கெர்த்தெவில் நிகழ்ந்தது. இடது கையில் துப்பாக்கித் தோட்டா துளைத்துக் கொண்டு சென்றதில் காயமுற்ற அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் 69 வயது நபர் போ​லீசாரால் கைது ​செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட முதியவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான எந்தவொரு லைசென்ஸையும் கொண்டிருக்கவில்லை. இவ்விவகாரம் 1990 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தின் ​கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கெமாமான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

Related News