Dec 4, 2025
Thisaigal NewsYouTube
காரில் பெண்ணின் சடலம் கண்டு பிடிப்பு
தற்போதைய செய்திகள்

காரில் பெண்ணின் சடலம் கண்டு பிடிப்பு

Share:

மாது ஒருவரின் சடலம் ஒன்று கார் ஒன்றில் கண்டு பிடிக்கப்ப்பட்டுள்ளது. இன்று காலை 10.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சுங்கை பூலோ அருகில் ஜெஜந்தாஸ் சுங்கை பூலோ மேம்பால உணவகத்திற்கு அருகில் ஒரு காரில் அந்த பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது தெரிவித்தார்.

வெள்ளை நிற ஹோண்டா சிட்டி ரக காருக்குள் நிலக் கரிகளை பயன்படுத்தி ஒரு பானையில் தீ மூட்டப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சவப்பரிசோதனைக்காக 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின் உடல் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News