Jul 31, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்

Share:

பகாங், பெக்கான் - னில் உள்ள கம்போங் சுங்ஙாய் மியாங் அருகில் கார் ஒன்று டிரெய்லர் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நேற்று இரவு 8.22 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு தம் குழுக்களுடன் விரைந்ததாக மலேசிய பகாங் தீயணைப்பு, மீட்பு படையினர் தெரிவித்தனர்.

பெரோடுவா கன்சில் ரக வாகனம் டிரெய்லருடன் மோதியதில் இரண்டாக பிளவுபட்டு தீப்பற்றிக்கொண்டது.

இச்சம்பவத்தின் போது காரை ஓட்டி சென்ற ஆடவன் வாகனத்திலிருந்து வீசப்பட்டதாகவும் பெண் காரில் சிக்கி எரிந்ததாகவும் ஓர் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Related News