ஈப்போ,ஜாலான் குவாலா கங்சார், குனோங் லங் பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையத்திற்கு அருகில் சாலையில் படுத்துக்கொண்டு, கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இச்செயலில் ஈடுபட்ட அந்த ஆடவர் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரம் குறித்து துல்லியமாக உறுதிப்படுத்த இயலவில்லை என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் யஹாயா ஹாஸ்ஸன் தெரிவித்தார். அந்த ஆடவரின் செயல் தொடர்பாக போலீஸ் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம் 283 பிரிவின் கீழ் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


