Sep 28, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியப் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அன்வாரின் ஒருநாள் பயணம் நிறைவு
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியப் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அன்வாரின் ஒருநாள் பயணம் நிறைவு

Share:

அதிகாரப்பூர்வ ஒருநாள் பயணமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்குச் சென்றிருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அந்நாட்டு பிரதமர் பரபோவோ சுபியாந்தோவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, தனது பயணத்தை நிறைவு செய்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் தொடங்கிய இச்சந்திப்பானது, சுமார் 2 மணி நேரங்கள் வரை நீடித்தது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்ற நிலை குறித்தும், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அச்சந்திப்பிற்குப் பின்னர், இரு தலைவர்களுக்கிடையேயான நட்பு மற்றும் நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில், பரபோவோ, அன்வாரை ஹலீம் பெர்தானா குசுமா விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினார்.

அதனைத் தொடர்ந்து, மாலை 7.15 மணியளவில் மீண்டும் மலேசியாவிற்குப் புறப்பட்டு, தனது ஒருநாள் பயணத்தை அன்வார் நிறைவு செய்தார்.

Related News