Jul 31, 2026
Thisaigal NewsYouTube
முழுமை இல்லாத மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

முழுமை இல்லாத மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு

Share:

மலாக்கா, தாமான் காடோங் பெர்டானா அருகே உள்ள மாலிம் நதிக் கரையில் முழுமை இல்லாத மனித எலும்புக்கூட்டை காவல் துறை கண்டெடுத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த மலாக்கா தெங்ஙா, மாவட்டக் காவல் துறைத் தலைவஎ எசிஸ்தன் கமிஷ்னர் க்ரிஸ்தோஃபர் பதிட் தெரிவிக்கயில், நேற்று மாலை 5.20 மணி அளவில் இந்த எலும்புக் கூடு குறித்து பொது மக்களிடம் இருந்து தமக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

அடுத்தக்கட்டமாக, மலாக்கா மாநிலக் காவல் துறௌயிக் தடயவியல் பிரிவும், K9 மோப்ப நாய் பிரிவும் சம்பவ இடத்திற்கு வந்து தங்கள் சோதனையை மேற்கொணடதில், பாதி எலும்புக் கூடு மண்ணில் புதையுண்டிருந்ததாக க்ரிஸ்தோஃபர் பதிட் தெரிவித்தார்,

அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக, அந்த எலும்புக்கூடு மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில், இறந்தது யார் என அடையாளம் தெரியவில்லை என்றும், குற்றச் செயல் நடந்திருப்பதற்கான தடயமும் கண்டறியப்படவில்லை என்றும் க்ரிஸ்தோஃபர் சொன்னார்.

Related News