சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சிக்கியுள்ள தொழில் அதிபர்களில் டத்தோ அந்தஸ்தை கொண்ட ஒரு தொழில் அதிபர் மற்றும் அவரின் சகாக்களிடமிருந்து 3 கோடியோ 80 லட்சம் வெள்ளி ரொக்கப்பணம், 6 கோடி வெள்ளி மதிப்புள்ள 200 கிலோ தங்கம் மற்றும் 17 ஆடம்பர கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திரைப்படங்களை விநியோகிக்கும் டத்தோ அந்தஸ்தை கொண்ட ஒரு தொழில் அதிபர், இந்தியாவிலிருந்து கலைஞர்களை வரவழைத்து கலை நிகழ்ச்சிகளை படைக்கும் ஒரு தொழில் அதிபர், ஒரு தமிழ்ப்பத்திரிகை முதலாளி, சிரம்பானை சேர்ந்த ஒரு வர்த்தகரும், அரசியல்வாதியுமான ஒரு தொழில் அதிபர் ஆகியோரை நேற்று முன் தினம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்தது.
எஸ்.பி.ஆர்.எம் தலைமையில் ஓ.பி.எஸ் 82s என்ற பெயரில் மலேசிய அமலாக்க ஏஜென்சியின் பணிப்பிரிவு,இந்த கைது நடவடிக்கையையும், பொருட்கள் பறிமுதலையும் மேற்கொண்டது. நேற்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் 34 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் வாயிலாக ரொக்கப்பணம், நகைகள் மற்றும் விலை உயர்ந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கைது நடவடிக்கையில் 315 அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பல லட்சம் வெள்ளி மதிப்புள்ள ஆடம்பர கார்களை வாங்குவதில் வேட்கை கொண்ட இந்த தொழில் அதிபர்களிடமிருந்து மசெராட்டி, ஃபெராரி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் என விலை உயர்ந்த 17 ஆம்பர கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்கள் கைது, அவர்களிடமிருந்து ரொக்கப்பணம், தங்கம் மற்றும் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதை எஸ்.பி.ஆர்.எம் மின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ ஆசம் பாக்கிஉறுதிபடுத்தினார்.
சட்டவிரோதப் பண மாற்றம் பயங்கரவாத நிதி அளிப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளின் வாயிலாக பணம் ஈட்டுதல் ஆகியவற்றை தடுக்கும் 2001 ஆம் ஆண்டு அம்லா சட்டத்தின் கீழ் இந்த தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போதைய செய்திகள்
பிடிபட்ட டத்தோ மற்றும் அவரின் சகாக்களிடமிருந்து 3 கோடியே 80 லட்சம் வெள்ளி ரொக்கப் பணம் 200 கிலோ தங்கம் 17 ஆடம்பரக் கார்கள் பறிமுதல்
Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


