Jun 6, 2026
Thisaigal NewsYouTube
செபாட் எண்ணெய்  துரப்பண மேடை  விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி
தற்போதைய செய்திகள்

செபாட் எண்ணெய் துரப்பண மேடை விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

Share:

கோலா திரங்கானு, மே.27-

கோலா திரெங்கானு, செபாட் எண்ணெய் துரப்பண மேடையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, சமூக பாதுகாப்பு நிறுவனமான 'பெர்கேசோ' (PERKESO) மூலம் வாழ்நாள் மாதாந்திர நிதியுதவி மற்றும் மரணச் சகாய நிதியுதவிகள் வழங்கப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த அஹ்மாட் ஃபிக்ரி ஸாகாரியாவின் குடும்பத்திற்கு மாதந்தோறும் 5,355 ரிங்கிட்டும், Muhammad Faezuan Hakim Mohammad Bustamam குடும்பத்திற்கு மாதந்தோறும் 3,105 ரிங்கிட்டும் வாழ்நாள் பலனாக வழங்கப்படும். மேலும், இவ்விரு குடும்பங்களுக்கும் தலா 3,000 ரிங்கிட் மரணச் சகாய நிதியுதவி உடனடியாகச் செலுத்தப்படும்.

திருமணமாகாத, பெற்றோர் இல்லாத ஊழியரான Nik Muhammad Hafifi Asri Ab Majid இறுதிச் சடங்கு செலவிற்காக அவரது அண்ணனிடம் 3,000 ரிங்கிட் ஒருமுறை நிதியுதவியாக வழங்கப்படும்.

இவ்விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் முகமது தவ்பிக் என்ற ஊழியருக்கு தற்காலிக ஊனமுற்றோர் பலன்கள் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிதியுதவிகள் ஒரு வாழ்வாதாரப் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்