கோல திரங்கானு, செப்டம்பர்.05-
2026 ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் போனாஸ் தொகையாக அல்லது சிறப்புத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆகக் கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு, அரசு ஊழியர்களுக்குச் சிறப்புத் தொகையான ஒரு மாதச் சம்பளம் வழங்கப்பட்டது.
எனவே ஒரு மாமாங்கத்தை அடைந்து விட்ட நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாதச் சம்பளம் போனசாக கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று கியூபெக்ஸின் தலைவர் டத்தோ அட்னான் மாட் நம்பிக்கை தெரிவித்தார்.








