Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நில அலுவலகப் பணியாளர்கள் உட்பட 13 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நில அலுவலகப் பணியாளர்கள் உட்பட 13 பேர் கைது

கோலாலம்பூர், நவ. 26-


சிலாங்கூர் மாநிலத்தில் மாவட்ட நில அலுவலகத்திற்கு சொந்தமான நிலத்தின் உரிமையை தங்களுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களுக்கு மாற்றிக்கொண்ட பெரும் மோசடி தொடர்பில் நில அலுலகப் பணியாளர்கள் உட்பட 13 பேரை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கைது செய்துள்ளது.

இம்மாதம் முற்பகுதியில் இச்சம்பவம் தொடர்பில் மாவட்ட உதவி அதிகாரி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் பிடிபட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட கும்பல் நில அலுவலகத்திற்கு சொந்தமான முக்கிய ஆவணங்களை அழித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →