நாட்டில் உள்ள 11 நெடுஞ்சாலைகளில் திறந்த டோல் கட்டண முறை இன்று வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
வாகனமோட்டிகள் தங்களிடம் உள்ள டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்தி டோல் கட்டணம் செலுத்துவதற்கு இந்த திறந்த கட்டண முறை வகை செய்கிறது. கோலாலம்பூர் அடுக்குச் சாலையான அக்லே, கத்ரி நெடுஞ்சாலையான ஜி.சி.இ, சுங்கை பீசி விரைவுச்சாலையான பெஸ்ராயா, புதிய பந்தாய் விரைவுச்சாலையான என்.பி.இ உட்பட 11 பிரதான நெடுஞ்சாலைகளில் இந்த திறந்த டோல் கட்ட முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெச்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
2024ஆம் ஆண்டிற்குள் கட்டங் கட்டமாக இதர நெடுஞ்சாலைகளின் இந்த திறந்த டோல் கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
MLFF எனப்படும் வாகனங்கள் வேகமாக நகரும் பல வழித்தடங்கள் செயல்முறைக்கு மாற்றுவதற்கான ஒருமுன் முயற்சியாக இந்த நேரடி கட்டண முறை அமல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொருவரும் இந்த திறந்த கட்டண முறை வாயிலாக தங்களின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, டோல் கட்டணம் செலுத்துவது மூலம் மலேசிய டோல் சாவடிகளில் ஒரே நிறுவனம் ஆக்கிரமித்துக் கொண்டு இருந்த Touch “N Go, மற்றும் SmartTag போன்ற டோல் கட்டண முறைக்கு முடிவு கட்டப்படுகிறது.








