Sep 30, 2026
Thisaigal NewsYouTube

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

பெக்கான், ஜனவரி.18-

பகாங், பெக்கான் முகாமில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்கள் திரண்டதால், 254 பயிற்சியாளர்கள் பயிற்சியில் சேர முடியாமல் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டனர். அந்த முகாமில் 556 பேருக்கு மட்டுமே இடமிருந்த நிலையில், Walk-in முறையில் நேரடியாக வந்து பதிவு செய்தவர்களையும் சேர்த்து மொத்தம் 838 பேர் அங்கு திரண்டதால் இந்த அசாதாரண சூழல் ஏற்பட்டது.

தங்குமிட வசதிகளை மாற்றியமைத்த பின்னரும், நேரடியாக வந்த 282 ஆண்களில் 28 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்த நிலையில், மற்றவர்கள் அடுத்த பயிற்சித் தவணைக்கு மாற்றப்பட்டுள்ளனர். முறையான உறுதிப்படுத்தல் செய்யாமல் நேரடியாக வந்ததே இந்த இட நெருக்கடிக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ள தேசிய சேவை பயிற்சித் துறை, வீடு திரும்பியவர்கள் பயணச் செலவுக்கான இழப்பீட்டைக் கோரலாம் எனக் கூறியுள்ளது. அதே வேளையில் கோலாலம்பூர் முகாமில் தங்கியிருந்த பெண்களுக்கு எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை என்பதும், இரண்டு முகாம்களிலும் சேர்த்து 315 பேரில் 61 பேர் மட்டுமே நேரடியாகப் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பல பெற்றோர்களும் பயிற்சியில் இணைய வந்தவர்களும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →