May 22, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் இளம்பெண் மரணம்
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் இளம்பெண் மரணம்

Share:

ரானாவ், மே 14-

ரானாவ், கம்போங் லேசிங் -கில் உள்ள இரண்டு மாடி வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 15 வயது ஆக்னஸ் ஜாங் அனாக் அடாம் வீட்டின் வரவேற்பு அறையில் தீயினால் பாதிக்கப்பட்டு, அவரின் உடல் எரிந்த நிலையில் கண்டறியப்பட்டதாக தெரியப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணை விபத்திலிருந்து அவரின் மாமா காப்பாற்ற முற்பட்ட வேளை, அதிவேகமாக எரிந்து கொண்டிருந்த தீயினாலும், புகையினாலும் அந்த முயற்சி தோல்வியுற்றது.

இச்சம்பவம் குறித்து நள்ளிரவு 1.36 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து, எட்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ரானாவ், தீயணைப்பு, மீட்புப்படையின் தலைவர் ரித்வான் முகமது தைப் கூறினார்.

பிறகு, தீ முழுமையாக அணைக்கப்பட்ட வேளை, தீயில் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் உடல் மேல் நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரித்வான் முகமது தைப் குறிப்பிட்டார்.

Related News