நாட்டில் ஜூன் மாதம் ஏற்படவுள்ள El Nino எனும் வரட்சி பருவத்தை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டும் என சுற்றுசூழல் நிபுணர் பேராசிரிய டாக்டர் ஹலிஸா அப்துல் ரஹ்மான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை நாட்டில் 12 முறை இந்த வரட்சி காலம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் அதன் தாக்கம் ஆண்டிற்கு ஆண்டு மாறுமட்டு இருப்பதால், மலேசிய இப்பொழுதிலிருந்தே இந்த வரட்சி பருவத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஏரிகள் மற்றும் நீரணைகளில் போதுமான அளவில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருவதை உறுதிச் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன் நீரை சிக்கனமான பயன்படுத்தும் போக்கை மலேசியர்களும் தொழிற்சாலை நடத்து தொழில் முடைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என டாக்டர் ஹலிஸா வலுயுறுத்தினார்.








