அலோர் ஸ்டார், அக்டோபர்.23-
லங்காவி செனாங் கடற்கரையில் நேற்று புதன்கிழமை, கடலில் நீந்தச் சென்ற இரு ஆடவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மாலை 6.05 மணியளவில் போலீசுக்குத் தகவல் கிடைத்ததாக லங்காவி துணை போலீஸ் தலைமை அதிகாரி ஷாம்சூல்முடின் சுலைமான் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரைச் சேர்ந்த 38 மற்றும் 46 வயதுடைய இரு ஆடவர்கள் விடுமுறையைக் கழிக்க லங்காவிக்கு வந்த இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் பொதுமக்களால் கடலில் இருந்து மீட்கப்பட்டு, லங்காவி சுல்தானா மலிஹா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








