Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கூலிம் கிளப் மோதல் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
தற்போதைய செய்திகள்

கூலிம் கிளப் மோதல் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

Share:

கூலிம் கிளப்பில் நடந்த கைகலப்பு தொடர்பாக, பாடாங் செராய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே 3-ஆம் தேதி, 55 வயது ஆடவர் ஒருவரை கத்தியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பும் புகார் அளித்துள்ள நிலையில், முன்னாள் எம்பி மீது குற்றவியல் சட்டம் 324 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா திசைகளிடம் தெரிவித்தார்.

அதே வேளையில், அந்த முன்னாள் எம்.பி. அளித்த புகாரின் பேரில் காயமடைந்த நபர் மீது திருட்டு மற்றும் காயம் விளைவித்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று டத்தோ அட்லி விளக்கினார்.

இன்று காலை அவ்வ்விருவரும் கூலிம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நாள் தடுப்புக்காவல் வழங்கிய நீதிமன்றம், காயமடைந்த நபரின் தடுப்புக்காவல் கோரிக்கையைத் தள்ளுபடி செய்தது. மேலும், காயமடைந்தவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்