கோத்தா கினபாலு, செப்டம்பர்.06-
ஸாரா கைரினா மகாதீர் வழக்கில், தனக்கு இணையவாசிகளால் மிரட்டல் வருவதாகக் கூறி குயின் எலிஸபெத் மருத்துவமனையின் சவப் பரிசோதனை நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியூ போலீஸ் புகார் அளித்துள்ளார்.
ஸாரா மரணம் தொடர்பான வழக்கில் இரண்டு நாட்கள் சாட்சியமளித்ததைத் தொடர்ந்து, அவருக்கு இந்த மிரட்டல் வந்திருப்பதாக மாவட்ட காவல் துறைத் தலைமை உதவி ஆணையர் காசிம் மூடா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் நடந்த விசாரணையின் போது, 13 வயது மாணவி ஸாரா தங்கும் விடுதியின் முதல் மாடியில் இருந்து தற்செயலாகவோ அல்லது தள்ளப்பட்டிருக்கவோ வாய்ப்பில்லை என டாக்டர் ஜெஸ்ஸி சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








