Sep 30, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீரின் உடல்நலத்துக்காக அமைச்சரவை பிரார்த்தனை
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரின் உடல்நலத்துக்காக அமைச்சரவை பிரார்த்தனை

Share:

தேசிய இருதயக் கழகத்தில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் அவர்களின் உடல்நலத்துக்காக அமைச்சரவை பிரார்த்தனை தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் கூறுகையில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், துன் மகாதீரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலி மறைவுக்கு அவருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததாகக் கூறினார்.

இதனிடையே, டான் ஶ்ரீ மொக்ஸானி மகாதீர் கூறுகையில், தனது தந்தை செப்டம்பர் 29 ஆம் தேதி தேசிய இருதயக் கழகத்தில் மருத்துவக் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related News