Oct 6, 2026
Thisaigal NewsYouTube

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

குவாந்தானில் காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, 19 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவி கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் நெருங்கிய தோழி, தனது தோழியின் மரணத்தை ஏற்க முடியாமல் கதறியுள்ளார்.

சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா பாலிடெக்னிக் கல்லூரி மாணவியான அந்தத் தோழி, கடந்த ஆண்டு முதல் ஒரே வகுப்பில் படித்து வந்ததாகவும், இருவரும் அடிக்கடி ஒன்றாக உணவு சாப்பிட்டு மகிழ்ந்ததாகவும் தெரிவித்தார். உயிரிழந்த மாணவி அமைதியான சுபாவமும் எப்போதும் சிரித்த முகத்துடனும் இருந்தவர் என்றும் அவர் கூறினார்.

“அவளுடன் நிறைய நினைவுகள் இருக்கின்றன. இனிமேல் அவள் இல்லாமல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை” என்று கூறிய தோழி, தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு வெளியே கண்ணீர்விட்டு அழுதார்.

ஜாலான் ஆயர் பூத்தேவில் உள்ள வீட்டில் மாணவி இறந்து கிடந்த நிலையில், சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, உயிரிழந்த மாணவியும் மேலும் மூன்று பாலிடெக்னிக் மாணவர்களும் அந்த மூன்று மாடி வீட்டில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்ததாக தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 19 வயது சந்தேக நபர் முன்னதாக அதே பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர் என்றும், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அங்கிருந்து நீக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் அடையாளத்தை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →