ஈப்போ, ஆகஸ்ட்.07-
ஈப்போ, செமோர், தாமான் கிளேபாங் ஜெயாவில் ஒரு வீட்டில் பெண்ணின் அழுகிய சடலம் இன்று வியாழக்கிழமை மாலை 4.20 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீட்டிற்கு அருகில் உள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளச் சென்ற முகவர் ஒருவர், அந்த வீட்டைக் கடந்து செல்லும் போது சடலத்தைக் கண்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.
துர்நாற்றம் கடுமையாக இருந்ததால் அந்த வீட்டை எட்டிப் பார்க்க முயற்சித்த போது பெண்ணின் சடலத்தை அந்த முகவர் கண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.








