Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவின் மருத்துவச் சேவை, புருணை சுல்தான் நன்றி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவின் மருத்துவச் சேவை, புருணை சுல்தான் நன்றி

கோலாலம்பூர், ஜூன்.24-

அண்மையில் தமக்கு வழங்கப்பட்ட நிபுணத்துவ மருத்துவச் சேவை குறித்து மலேசிய மருத்துவக் குழுவினருக்கு மேன்மை தங்கிய புருணை சுல்தான், சுல்தான் ஹாஸ்ஸானால் போல்கியா தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மிகச் சிறந்த மருத்துவச் சேவையை உளப்பூர்வமாக மலேசிய மருத்துவர்கள் வழங்கியதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் தொலைபேசியில் பேசிய புருணை சுல்தான், இதனைத் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கவனிப்பும், உபசரிப்பும் தன்னை நெகிழச் செய்ததாக புருணை சுல்தான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மலேசியா ஏற்று நடத்திய ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட புருணை சுல்தான், உடல் அயர்வு காரணமாக கோலாலம்பூர் ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →