Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ரிங்கிட் அடுத்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.05-RM4.06 அளவில் வர்த்தகமாகும்
தற்போதைய செய்திகள்

ரிங்கிட் அடுத்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.05-RM4.06 அளவில் வர்த்தகமாகும்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.17-

மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியாவின் நாணய கொள்கைக் குழுக் கூட்டம், வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தற்போது நிலவும் எச்சரிக்கை உணர்வு காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட், அடுத்த வாரம் ஒரு குறுகிய வரம்பில் வர்த்தகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த Bank Muamalat Malaysia Berhad- இன் தலைமைப் பொருளாதார நிபுணர் Dr Mohd Afzanizam Abdul Rashid, "வளர்ச்சிப் பாதை நிலையானதாகவும், பணவீக்க விகிதம் குறைவாகவும் காணப்படுவதால், பேங்க் நெகாரா மலேசியாவின் ஒரே இரவுக் கடன் விகதமான OPR 2.75 விழுக்காடாகப் பராமரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உட்பட, கூட்டத்தின் முடிவுகளில் வர்த்தகர்கள் கவனம் செலுத்துவார்கள்" என்றார்.

இதன் விளைவாக, அடுத்த வாரத்தில் ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.05 முதல் RM4.06 வரையிலான வரம்பில் வர்த்தகம் செய்யப்படும் என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், Kenanga Investment Bank Bhd, அமெரிக்க மத்திய வங்கியின் மீதான அழுத்தம், அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் போக்குக்கு மேலும் வலுசேர்க்கிறது எனக் கூறி, ரிங்கிட் RM4.05-RM4.08 என்ற வரம்பில் வர்த்தகமாகும் என்று கணித்துள்ளது.

Related News

ரிங்கிட் அடுத்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.05-RM... | Thisaigal News