நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமர்ப்பிக்கவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மலேசிய தன்னம்பிக்கை வாழ்வியல், பயிற்சி அமைப்பின் தலைவர் ஜி. பிரான்சிஸ் சிவா கேட்டுக்கொண்டார்.
வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து விட்ட நிலையில் மாற்றுத் திறனாளிகளின் பெரும்பாலோர் பி40 பிரிவைச் சேர்ந்தர்களாக இருப்பதால் அவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் அதிகரித்து வருவதாக பிரான்சிஸ் சிவா குறிப்பிட்டார்.
மருந்துப் பொருட்கள் வாங்குவதற்கான வவுச்சர்கள் மற்றும் பிற உதவிகள் வழங்கப்படுவது மூலமே மாற்றுத் திறனாளிகள் பிறரை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படாது என்று பிரான்சிஸ் சிவா தெரிவித்தார்.








