Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்

Share:

ஈப்போவில் அமைய விருக்கும்நியூரோ ரோபாட்டிக்ஸ் மற்றும் சைபர்னிக்ஸ் மறுவாழ்வு மையம் திட்டத்திற்கான செலவினம் திடீரென்று கூடுதலாக 15 கோடியே 40 லட்சம் வெள்ளி அதிகரித்திருப்பது குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென்று ஈப்போ பாராட் எம்.பி. எம். குலசேகரன் கேட்டுக்கொண்டார்.

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவினால் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டம், ஈப்போவில் அமைய விருக்கிறது.

இத்திட்டம் தொடர்பான குத்தகை நிறுவனம் ஒன்றுக்கு நேரடியாக வழங்கப்பட்டிருப்பது, செலவினத்தைக் குறைக்க வல்லதாகும் என்று கூறப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மனித வள அமைச்சருமான குலசேகரன் குறிப்பிட்டார்.

விபத்துகளில் சிக்கிய தொழிலாளர்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியோர் தங்கள் உடலில் ஏற்பட்டுள்ள உபாதைகளுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் வேலைக்குத் திரும்புவதற்கு தயார் படுத்தும் சொக்சோவின் முதன்மை திட்டம் தான் இந்த மறுவாழ்வு மையமாகும்.

இத்திட்டத்தை 50 கோடி வெள்ளி செலவில் நிர்மாணிக்க பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் குத்தகை வழங்கியிருந்த வேளையில், அத்திட்டம் திடீரென்று 65 கோடியே 40 லட்ச வெள்ளியாக உயர்ந்திருப்பது ஏன்? என்று குலசேகரன் வினவினார்.

Related News

அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் | Thisaigal News